என்னைப்பற்றி

பெயர்-தம்பிரட்னம் சதிஸ்காந்
பிறந்த இடம்- மட்டக்களப்பு
* கல்வி  - முகாமைத்துவம் மற்றும் விவசாயத்துறையில் டிப்ளோமா

*பாடசாலைக் காலத்தில் இருந்தே கவிதை, பாடலாக்கம், நடனம், நடிப்பு, புகைப்படத்துறை, கட்டுரை ஆகிய கலைத்துறைகளில் அதிக ஆர்வம் கொண்டவர்.

*இதுவரை 3 தேசிய விருதுகளைப் பெற்றுள்ளார்.

மேலும்...

*மெட்ரோ நியூஸ்,வீரகேசரி,ஆனந்தவிகடன்,குமுதம் ஆகியவற்றில் கவிதைகளை எழுதி வருவதோடு இலங்கையின் முன்னணிப் பாடலாசிரியராகத் திகழ்கிறார்!

*சூரியன் fm , வெற்றி fm ஆகிய வானொலிகளுக்கு அதிகமான நிலையக் குறியிசைகளை இவரே எழுதியுள்ளார்!

*தற்போது இலங்கையில் இருந்து வெளிவரும் பாடல்களில் அநேகமானவை இவர் எழுதியதே!

*இதுவரை 40 க்கு மேற்பட்ட பாடல்களும் 10 நிலையக்குறியிசைகளையும் 3 விளம்பரப் பாடல்களையும் எழுதியுள்ளார்!

*இலங்கையின் தற்போதைய முன்னணி இசையமைப்பாளர்களான ஷமில், பிரஜீவ்,கந்தப்பு ஜெயந்தன், சகிஸ்னா போன்றவர்களுக்கு பாடல்களை எழுதியுள்ளார்!

*இவர் எழுதிய பூக்கின்றாய் பூவாய், மழைவிழி, காதோடு காதல் , ஓராயிரம் வெண்ணிலா, வானவில் தேவதை, துளி துளி , தாய்மடியே , ஐ லவ் யு, சோனியா, ஓர் சென்ட்ரலா ஆகிய பாடல்கள் சூப்பர் ஹிட் பாடல்களாக அமைந்ததோடு மக்களிடையே சிறந்த வரவேற்பையும் பெற்றது!


*கனடாவில் உள்ளம் திறேந்தேன் (ஷமில்) இலங்கையில் கனவின் கருவில் (ஷமில்) டெஸ்டினி (ப்ரணீவ்) மற்றும் யாழ்தேவி (கந்தப்பு ஜெயந்தன்) ஆகிய இசைத் தொகுப்புகளில் பாடல்கள் எழுதி உள்ளார்!

* தற்போது இவர் தென்னிந்தியத் திரைப்படத்திலும்  பாடல் எழுதிக்கொண்டு இருக்கிறார் !


இவர் பற்றி ஏனைய இணையத்தளங்களில்